tamilnadu

ஜன.1 மாலை 5 மணி வரை அஞ்சல் வாக்குகளைச் செலுத்தலாம்

தஞ்சாவூர் டிச.28- தஞ்சாவூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக டிச.27 அன்று கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு மற்றும் பூதலூர் ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடை பெற்றது.  இதில் 1,378 வாக்குச்சாவடிகளில் பணி புரிந்த 11,394 அலுவலர்களுக்கும், டிச.30 அன்று இரண்டாம் கட்டமாக தஞ்சாவூர், ஒரத்த நாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, பேரா வூரணி, மதுக்கூர் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற உள்ள 1,390 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள 11,411 அலுவலர்களுக்கும் ஆக கூடுதல் 22,805 வாக்கு பதிவு அலுவலர்க ளுக்கு வாக்களிக்க ஏதுவாக அஞ்சல் வாக்கு படிவம்- 15 தேர்தல் பணி உத்தரவுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது,  அதில் நகர்புற பகுதிகளில் (மாநகராட்சி-நகராட்சி-பேரூராட்சி) வசிக்கும் வாக்குரிமை உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தவிர்த்தும், இரண்டு கட்டங்களில் பணி புரியும் அலுவலர்கள் தவிர்த்தும் மீதம் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்க ளிடமிருந்து, 4,954 அஞ்சல் வாக்கு கோரி, படிவம்-15 ல் விண்ணப்பித்துள்ளனர்.  அதில் முழுமையாக விண்ணப்பித்த 4,655 அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்கு சீட்டு கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்ன தாக விண்ணப்பித்த நபர்களில் அஞ்சல் வழியாக வாக்குச்சீட்டுகள் அனுப்பப்பட்டுள் ளது. அஞ்சல் வாக்குச்சீட்டுகள் அனுப்பாத நபர்களுக்கு தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்களில் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வாக்குப் பதிவு அலுவலர்கள் தங்களது வாக்கினை வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாளான 01-01-2020 மாலை 5 மணிக்குள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்களில் கிடைக்கும் வகையில் அஞ்சல் வாக்களிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது, ஆகையால் வாக்குப்பதிவு அலுவலர்கள் தவறாது, அவரவர் விண்ணப்பித்த அஞ்சல் வாக்கினை தொடர்புடைய ஊராட்சி ஒன்றி யங்களில் வாக்காளர் அடையாள அட்டை யினை காண்பித்து பெற்றுக்கொண்டு அங்கேயே அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ம.கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.   

;