tamilnadu

வேளாண் அலுவலகங்களில் ஆய்வு

நவ.4- பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் தஞ்சை வேளாண்மை துணை இயக்குநர் மத்திய திட்டம் சிங்காரம், மத்திய அரசு உதவி பெறும் அனைத்து திட்டங்களிலும் இது வரை ஏற்பட்டுள்ள முன்னற்றம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு உரிய முறையில் சென்றடைந்துள்ளதா என்பதை பட்டியல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மூலம் உறுதி செய்து கொண்டார்.  ஒவ்வொரு திட்டப் பணியும் முடிவடைந்த பின்னர் அதை  முறையே ஆவணப்படுத்தப்பட வேண்டுமென அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.மாலதி, வேளாண்மை அலுவலர் எஸ்.சங்கவி, துணை வேளாண்மை அலுவலர் மு.இராமையா ஆகியோர் உடனிருந்தனர்.