தஞ்சாவூர் செப்.22- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில், தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றியம் வரகூர் கிராமத்தில், சனிக்கிழமை தகவல் பலகை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் த.வி.ச மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் எம்.பழனிஅய்யா, எம்.ராம், ஏ.ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் பிரதீப் ராஜ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.