tamilnadu

தஞ்சை அதிகாரிக்கு தொற்று கொரோனா தடுப்பு பணிக்கு சென்னை சென்றவர்

தஞ்சாவூர், ஜூன் 13- சென்னையில் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளு க்கு நாள் அதிகரித்து வருகி றது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் தமிழகத்தின் பிற மாவட்ட மாநகராட்சி, நகராட்சி பணியாளர்களை சென்னையில் பணியாற்ற நக ராட்சி நிர்வாக ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் ஒவ்வொரு மாநக ராட்சி, நகராட்சியிலிருந்தும் பணியாளர்கள் சென்னை க்கு சென்று பணியில் ஈடு பட்டுள்ளனர்.  அதன்படி தஞ்சாவூரிலி ருந்து கடந்த சில நாட்களு க்கு முன்பாக மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சி வாயம் தலைமையில் 5 சுகா தார ஆய்வாளர்கள் சென்ற னர். இதில் தஞ்சாவூர் கீழவா சல் பகுதியைச் சேர்ந்த சுகா தார ஆய்வாளர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் தஞ்சாவூருக்கு இரு தினங்க ளுக்கு முன் திரும்பி வந்தார். பின்னர் அவர் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவ ருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானதை அடுத்து தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதனால் மாநக ராட்சி பணியாளர்கள் சென்னைக்கு பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வரு கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறு கையில்: தஞ்சாவூர் மாவட்டத் தில் இதுவரை 140 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 100 பேர் சிகிச்சை முடிந்து வீடு  திரும்பியுள்ளனர். மாநக ராட்சி பகுதிகளில் கொரோ னா தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை, தற்போது அதிகரிக்க தொ டங்கிய நிலையில், பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற் பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, மாநக ராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில், சுகாதார ஆய்வாளர் ஐந்து பேர் கொரோனா தடுப்பு பணிக்காக சென்னை சென்றி ருந்தனர். அதில் ஒரு பணியா ளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலை யில், சென்னையில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப் பட்டார்.  தற்போது அவர் தஞ்சா வூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், சக பணியாளர் கள் மிகவும் கலக்கத்தில் உள்ளனர். அத்துடன் சென்னைக்கு கொரோனா தடுப்பு பணிக்காக, மாநக ராட்சி நிர்வாகம் சார்பில் அனுப்ப பட்டியல் தயார் செய்யப்பட்ட நிலையில், பலரும் தயக்கம் காட்டிய நிலையில், அப்பணியை மாநகராட்சி நிர்வாகம் முடக்கி வைத்துள்ளது” என்றனர்.