tamilnadu

img

‘பன்முக கலாச்சாரத்தின் தாயகமாக திகழ்கிறது இந்தியா’ வெங்கய்யா நாயுடு ‘ஒப்புதல் வாக்குமூலம்’

தஞ்சாவூர், ஜன.12- தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறில் 173 வது தியாகராஜர் ஆராத னையை குடியரசுத் துணைத் தலை வர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை மாலை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: இசை உலகில் உயர்ந்த இட த்தைப் பிடித்த, ஆளுமை மிக்க வராக தியாகராஜ சுவாமிகள் இருந் தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நமது கலாச்சார பாரம் பரியத்தை செம்மைப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்புகளை அள விடவோ, மதிப்பிடவோ முடியாது. ரோமாபுரி, பாபிலோனியா, கிரேக்கம், எகிப்து போன்ற நாக ரிகங்களைப் போல இந்திய நாகரி கம் மிகவும் பழமை வாய்ந்தது. ஆனால் இவற்றில் இந்திய நாகரி கம் மட்டுமே தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. பன்முக கலாச் சாரத்தின் தாயகமாக நம்நாடு உள் ளது. பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக வர்ணிக்கப்படும் இந்தக் கலாச்சாரம், இந்திய துணைக் கண்டம் முழுக்க பரவியுள்ளது, நம் நாட்டில் எத்தனையோ கட்சி கள் இருக்கலாம். நாம் எந்த கட்சி யில் வேண்டுமானாலும் இருக்க லாம். நாம் எந்த கட்சியில் இருந்தா லும் நாம் இந்தியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. தாய்மொழி யிலேயே கல்வி கற்க வேண்டும். குறிப்பாக பள்ளிக் கல்வியை ஆங் கில மொழியில் கற்பதை விட தாய் மொழியில் கற்பது அவசியம். சிறந்த சிந்தனைகளைத் தாய்மொழியில் தான் பெறமுடியும். எனவே தாய் மொழியைக் கைவிடக் கூடாது. இசைதான் மக்களை ஒருங்கி ணைக்கிறது, நம்முடைய இசை உலக புகழ்பெற்றது, இசையில் நாம் கவனம் செலுத்தினால் நம் மனதும் மேம்படும். குழந்தைக்கு தாய் பாடும் தாலாட்டில் தொடங்கி, வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இசை ஊடுருவி நிற்கிறது.  தூய் மையான இசை என்பது, நம்மை செம்மைப்படுத்தக் கூடியது. இங்கு பாயும் காவிரி நதியை பார்க்கும் போது மனம் அமைதியாக காணப் படுகிறது. இந்த நதியை நாம் பாது காக்க வேண்டும், அதே போல் நீர் நிலைகளையும், தண்ணீர் சிக்க னத்தையும் நாம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நட ராஜன், ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா செயலாளர் வி. ராஜாராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;