கும்பகோணம், ஆக.20- திருவிடைமருதூர் ஒன்றியம் திருபுவனம் திருவிசநல்லூர் பகுதிகளில் அரசு மூலம் குளங்கள் தூர்வாரப்படுகிறது. ஆனால் ஒன்றியத்தின் இதர பெரும் பகுதிகளில் இன்னும் குளங்கள் தூர்வாரப்படவில்லை. இதுகுறித்து கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் சார்ஜீவபாரதி தெரிவித்ததாவது: குடிநீர் வாழ்வாதாரத்திற்கும் நிலத்தடி நீர் உயர்வதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றியம் சார்பாக நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பலகட்டப் போராட் டங்கள் நடத்தினோம் அதன் வெளிப்பாடாக திருவிடைமரு தூர் ஒன்றியத்தில் திருபுவனம் திருவிசநல்லூர் பகுதிகளில் குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. ஆனால் திருவிடைமருதூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும் குளங்களை தூர்வார வரும்போது அரசின் சட்டப்படியான குளம் தூர்வா ரப் படுவதற்கான வழிகாட்டுதல்களை மீறாமலும் மணல் கொள்ளைக்கு இடம் தராமலும் பணிகள் நடைபெற உத்தர வாதப்படுத்த வேண்டும் ஆறு குளங்களில் பொதுமக்களும் விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் உரிய முறையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மழைக் காலம் துவங்கி விட்ட காரணத்தினால் இப்பணி யை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் தூர்வாரப்பட்டு வாய்க்கால் குளங்கள் திருபுவனம் முதலியார்குளம், வண் ணார் குளம், கீழ சாலையில் உள்ள தாமரைக்குளம் கரைப்பகு தியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து கழிவுநீர் குளங்க ளில் கலக்காமல் இருக்க உரிய தடுப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய சிபிஎம் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனுவை அளித்துள்ளோம் என்றார்.