கும்பகோணம், மே 20- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்ககும்பகோணம் கிளை சார்பில் தாராசுரம் கடைவீதியில் கலைஇலக்கிய விழா நடைபெற்றது. விழாவிற்கு கலை ஆர்வலர்திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஆர்.ராமமூர்த்தி, அருள்தாஸ், மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க குடந்தை கிளை செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். இலக்கிய விமர்சகர் ராஜகோபாலன் அறிமுக உரை நிகழ்த்தினார்.சங்க மாநில துணைச் செயலாளர் களப்பிரன், ஐராவதீஸ்வரரும்- சோழப் பேரரசும் என்ற தலைப்பில் சிறப்புரைஆற்றினார். மாவட்டத் தலைவர் சா.ஜீவபாரதி பேசினார்.குடந்தை வட்டக் கிளை தலைவர் கவிஞர் அனந்தசயனன், ஆர்.எஸ்.நாதன், கருணாநிதி ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்ச்சியில் கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் குழுவினரின் இன்னிசை நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் மேலை நீலமேகம் மற்றும் ராமமூர்த்தி ஆண்டான் அடிமைமுறையை விளக்கி ஓரங்க நாடகம் நடத்தினர். தாராசுரம் செல்வம் நன்றிகூறினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ரஞ்சித்குமார், செல்லதுரை, சரண்ராஜ், கார்த்திக் உள்பட கலைஞர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.