tamilnadu

img

பசுமைச் சோலை திட்டம்  தொடக்க விழா

 தஞ்சாவூர், ஆக.14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி தோழமை சமூக சேவை மையம் சார்பில் “நீரை நிலத்தில் தேடாமல், வானத்திலிருந்து வரவேற்போம்” என்ற முழக்கத்தோடு, பசுமை சோலைத் திட்டம் தொடக்க விழா பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் பாலச்சந்தர் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில், பேராவூரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட அலு வலர் முனைவர் க.சற்குணம் மாணவர்களுக்கு மரக்கன்று களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மழை வளம் பெருக வேண்டி அனைத்துப் பள்ளி மாண வர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் நோக் கத்தை விளக்கி சமூக சேவை மையத்தின் ஒருங்கி ணைப்பாளர் மருத. உதயகுமார் பேசினார். திருக்குறள் பேரவை பொறுப்பாளர்கள் ஆறு. நீல கண்டன், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், கெ. ஜெயபாலன், கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க பொருளாளர் வேலு. கார்த்திகேயன், நிமல் ராகவன், தோழமை சமூக சேவை மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

;