தேனி, ஜூன் 3- தேனியில் ரூ 89.01கோடி மதிப்பீட் டில் சட்டக்கல்லூரி, விடுதிக் கட்டு மானப் பணிகளை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் புதன்கிழமை துவக்கிவைத்தனர். தேனி அரசு சட்டக்கல்லூரிக்கு நிரந்தரக் கட்டடம் கட்டும் வகையில,; தேனி வட்டம், தப்புகுண்டு வருவாய் கிராமத்தில் சுமார் 12 ஏக்;கர் பரப்ப ளவில கல்லூரி வளாகமும் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவில் மாணவர் விடுதி யும் என மொத்தம் 14 ஏக்கர் பரப்பள வில், ரூ. 89.01 கோடி மதிப்பீட்டில் நிரந்த ரக் கட்டடம் கட்ட தமிழக முதல்வர் கடந்த 6.03.2020 அன்று காணொலிக் காட்சியின் மூலம் அடிக்கல் நாட்டி னார். அதைத் தொடர்ந்து, புதனன்று புதிதாக கட்டப்படவுள்ள தேனி அரசு சட்டக்கல்லூரி மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிக் கட்ட டங்கள் ஆகியவைகளின் கட்டுமானப் பணிகளை சட்ட அமைச்சர் சி.வி.சண் முகம் தலைமையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத் தார்.
புதிதாக கட்டப்படவுள்ள தேனி அரசு சட்டக்கல்லூரியில் தரை மற் றும் இரு தளங்கள், 26 வகுப்பறை கள், சுமார் 400 மாணவர்கள் பங்கு பெறும் வகையில் கருத்தரங்கக்கூடம், காணொலிக் காட்சி அறை, சொற் பொழிவு அறை, மாணவ, மாணவி யர்களுக்கென தனித்தனி ஓய்வறை கள், கணிணி ஆய்வகம், உள் விளை யாட்டரங்கம், மாணவர்கள் சர்வதேச மாதிரி நீதிமன்றப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கேற்ப சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நவீன தரத்தில் கல்லூரி அலுவலகம், நிர்வாகத் தொகுதிக் கட்டடங்கள், அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அடங்கிய நூலக கட்டடங்கள், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தேனி அரசு சட்டக்கல் லூரி கட்டப்படவுள்ளது.
இந்த விழாவில், மாவட்ட ஆட்சி யர் பல்லவி பல்தேவ் ,தேனி நாடா ளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.டி.கே.ஜக்கையன், பி.நீதிபதி, சென்னை சட்டக்கல்வி இயக்குநர் நா.சு.சந்தோஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலு வலர் க.ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தது வரவேற்கத்தக்கது. ஆனால் தனித மனித இடைவெளி காணாமல் போனது.