tamilnadu

img

தமிழ்ப் பல்கலை.யில் அறக்கட்டளை அமைப்பு 

 தஞ்சாவூர், ஜூலை 24- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் “கவியோகி நாச்சிகுளத்தார் அறக்கட்டளை” என்ற பெயரில் புதிய அறக்கட்டளை நிறுவப்பட்டது. இதற்கான வைப்புத் தொகை ரூ.1,00,000-ஐ கவியோகி நாச்சிகுளத்தார் என்ற ழைக்கப்படும் முகம்மது யூசுப் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியனிடம் ரொக்கமாக வழங்கினார். இந்நிகழ்வின் போது அதிராம்பட்டினம் காதிர் முகை தின் கல்லூரி முன்னாள் முதல்வர் பேரா.எம்.ஏ.முகம்மது அப்துல் காதர், கரு.பேச்சிமுத்து, கவிஞர் முருகையன், பொன் வேம்பையன், அரங்கசாமி ஆகியோர் உடனி ருந்தனர். இந்த அறக்கட்டளை முதலீட்டில் இருந்து வரும் வரு மானத்தில் கவிஞர் நாச்சிகுளத்தாரின் பிறந்த நாளான ஜன வரி 12-ம் நாளில் பல்கலைக்கழக வளாகத்தில் ஆளுமை மிக்க தமிழறிஞர்கள் அழைக்கப்பட்டு, திருக்குறள் கட வுள் வாழ்த்துப் பாடல்களை உள்ளடக்கிய திருக்குறள் பற்றிய பொருளில் ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பால சுப்ரமணியன் கூறினார்.