tamilnadu

img

கும்பகோணத்தில்  துப்பாக்கிகள் பதுக்கி விற்பனை: 3 பேர் கைது

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் துப்பாக்கிகள் பயன்பாடு அதிகம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த கும்பகோணம் விளந்தகண்டத்தைச் சேர்ந்த சக்திவேலை (35) பிடித்து விசாரணை நடத்தியதில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்பதும், துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.  அந்தத் துப்பாக்கியை திருப்பனந்தாள் மகாராஜாபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ராம்குமாரி டம் வாங்கியதாகவும், துப்பாக்கிகளை விற்க டாக்டருக்கு உதவியாக தானும் முட்டைகுடி யைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி அரவிந்தன் இருந்ததாகவும் டாக்டர் ராம்குமார் எம்பிபிஎஸ் எம்டி படித்து விட்டு சோழபுரத்தில் கிளினிக் நடத்தி வருவதாக வும் காவல்துறையினர் கூறினர்.  இதையடுத்து டாக்டர் ராம்குமார், அரவிந்தன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். டாக்டர் வீட்டில் சோதனை நடத்தியதில் அங்கு துப்பாக்கி புதையல் கிடைத்தது. ஏர்கன் வகை துப்பாக்கி உட்பட 6 துப்பாக்கிகள் மற்றும் 100 தோட்டாக்கள் கைப்பற்றப் பட்டன. இதைதொடர்ந்து டாக்டர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.  இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ராம்குமார் துப்பாக்கி பிரியர். வெளிநாடுகளில் இருந்து கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் தெரியாமல் கொண்டு வரும் துப்பாக்கியை விலை கொடுத்து வாங்கிக் கொள்வாராம். பலவகையான துப்பாக்கியை அவர் சேகரித்து வைத்துள்ளார். இது தெரிந்து துப்பாக்கி கேட்டு வருபவர்களுக்கு அவர் சப்ளை செய்தது தெரியவந்தது. துப்பாக்கி களை விற்க சக்திவேலும், அரவிந்தனும் முகவர்களாக இருந்துள்ளனர். இவர்கள், யாருக்கெல்லாம் துப்பாக்கி விற்றுள்ளனர். இதுவரை எத்தனை துப்பாக்கி விற்கப்பட்டது விசாரணை நடைபெறுகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

;