கும்பகோணம், நவ.3- கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட ஏரகரம் செந்தமிழ் நகரில் வசித்து வருபவர் நேரு, கொத்தனார். அவரது மனைவி விஜயலட்சுமி. இந்நிலையில் இருவரும் வெளியில் சென்றி ருந்த நேரத்தில் வீடு திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். வீட்டின் கூரை பகுதி, துணிகள் எரிந்தன. அண்மையில் பெய்த மழை யினால் மின் கம்பி பழுதடைந்து மின் கசிவு ஏற்பட்டு கூரை தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரி வித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது மேலும் இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேரில் பார்வையிட்டு விபரம் கேட்டறிந்த னர் அப்போது அவர்கள் கூறுகையில், நேரு, சாதாரண அன்றாட கூலித் தொழிலாளி. அவர் வீடு எரிந்த நிலையில் உள்ளதால் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு தகுந்த நட வடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.