தஞ்சாவூர், ஜூலை 21- தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உழவர் கடன் அட்டை மூலம் விவசாய பணிகளுக்கு கடன் பெறுவது குறித்து அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வங்கிகள் மூலம் உழவர் அடை யாள அட்டைகள் பெறுவது தொடர்பாக சனிக்கிழமை மதுக்கூர் வடக்கு, கருப்பூர், கீழக்குறிச்சி கிழக்கு மற்றும் பெரியக்கோட்டை கிராமங்களில் சிறப்பு முகாம் நடை பெற்றது. முகாம் ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் நவீன்சேவி யர், வேளாண் துணை அலுவலர் கலைச்செல்வன், உதவி அலுவலர்கள் ஜாகிர் உசைன், ஜெரால்டு ஞானராஜ் சுரேஷ், பாபி, கார்த்திக் ஆகியோர் செய்தனர். விவசாயி கள், உழவர் அடையாள கடன் அட்டை மூலம் பயிர் சாகு படி செய்வதற்கும், கால்நடை மற்றும் மீன் வளர்ப்புக்கும் கடன் பெற்று கொள்ளலாம். பயிர் சாகுபடி பரப்பள வுக்கேற்ப கடன் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.