tamilnadu

img

வாய்க்கால்களை தூர்வார மேலக்காவேரி மக்கள் கோரிக்கை

கும்பகோணம், ஜூன் 3-  கும்பகோணம் அருகில் உள்ள மேலக்காவேரியில் ஏழுக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. குளங்களுக்கு நீர் வரும் வழி பாதைகளான பல வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளது. சில வாய்க்கால்கள் தூர்ந்துப் போய் உள்ளது, ஆகவே உடனடியாக வாய்க்கால்களை தூர்வார கோரி மேலக்காவேரி பகுதி மக்கள், குடந்தை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார்கள்.  நிகழ்வின் போது கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த பயரஸ், அப்துல் அஜீஸ், கவிஞர் செல்வகுமார், முகம்மது மைதின், சாதிக், இஸாக், சிபிஎம் கட்சி கிளைச் செயலர் பழ.அன்புமணி,  மு.அய்யூப்கான் உட்பட மிஸ்வா அமைப்பினர், பொதுமக்கள்  கலந்து கொண்டனர்.