tamilnadu

img

குடிநீர் குழாய் உடைப்பு மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், ஜன.29-  தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகிலுள்ள ஊமத்தநாடு ஊராட்சி, கைவனவயல் ஆதிதிராவிட தெருவைச் சேர்ந்த சுமார் 10 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, கடந்த 35 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த தனியார் இடத்தில் குடிநீர் குழாய் இணைப்பு செல்கிறது. இந்தப் பகுதியில் ஊராட்சி மன்றத்தின் சார்பில் பொது குடிநீர் குழாய் ஒன்றும் உள்ளது. ஒரே குடிநீர் குழாய் மூலம் 10 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிநீர் பிடிப்பதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால் தங்களது வீடுகளுக்கு, சொந்தச் செலவில் ஊராட்சி மன்ற அனு மதியோடு, அவரவர் வீட்டிற்கு ஒரு குடி நீர் குழாய் இணைப்பு போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.  தன்னுடைய பட்டா இடத்தில் குடிநீர் குழாய் செல்வ தாகக் கூறி தனியார், மற்றவர்களுக்கு இணைப்பு போடக் கூடாது எனக் கூறி, பொது குடிநீர் இணைப்பை உடைத்த துடன், அந்த வழியாக சென்ற, குடிநீர் குழாயையும் வெட்டியுள்ளார்.  இதனால், அந்தப் பகுதியில் உள்ள வர்கள் கிராம பஞ்சாயத்து மூலம் பேசியும் தீர்வு ஏற்படவில்லை. இதனால்  குடிநீர் கிடைக்கவில்லை என ஆத்திர மடைந்த 10 க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர், வீரியங்கோட்டை கடைவீதியில் பேராவூரணி- மரக்காவலசை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி தலைவர் குலாம் கனி, கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர், காவல்துறை அதிகாரிகள் பொதுமக்க ளிடம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் குடிநீர் குழாய் அமைத்து தருவதாக கொடுத்த வாக்குறுதியின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

;