tamilnadu

img

சிதம்பரம் கோயிலில் பெண்ணைத் தாக்கிய தீட்சிதர் இடைநீக்கம்

சிதம்பரம், நவ.19- கடந்த சனிக்கிழமையன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் சரியாக அர்ச்சனை செய்யும்படி கூறிய பெண் ஒருவரைத் தாக்கிய தீட்சிதர் இரண்டு மாதங் களுக்கு இடைநீக்கம் செய்யப் பட்டிருப்பதாக கோயிலைச் சேர்ந்த தீட்சிதர்கள் தெரிவித்துள் ளனர். தீட்சிதர் தாக்கிய சம்பவம் குறித்து அந்த காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ளார். பெண்களைத் துன்புறுத்துதல், அவதூறாகப் பேசுதல், தாக்கு தல் ஆகிய பிரிவுகளின் கீழ் தர்ஷன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் தர்ஷன் இன்னும் கைதுசெய்யப் படவில்லை.

இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்றே கூடிய தீட்சிதர் களின் பொதுசபை, இது குறித்து விசாரித்ததாக சொல்லப்படு கிறது. இது குறித்து வெங்கடேச தீட்சிதர், “தர்ஷனை இரண்டு மாதங்கள் கோவில் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்வ தோடு, ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் முடிவெடுத்திருக்கிறோம்” என்று கூறினார். பிறகு, மீண்டும் அவர் கோயில் பணிகளைச் செய்வாரா என்று கேட்டபோது, “ஆமாம். இதுவே அதிகபட்ச தண்டனை” என்றார். காவல்துறை நட வடிக்கைக்கும் இதற்கும் சம்பந்த மில்லை என்றும் வெங்கடேச தீட்சிதர் தெரிவித்தார். இது குறித்து விசாரித்துவரும் சிதம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், “அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டார். நான் இப்போது அவரைத்தேடியே சென்னை வந்திருக்கிறேன். ஒரு அணி மயிலாடுதுறை சென்றிருக்கிறது. அவரைத் தொடர்ந்து தேடிவருகிறோம்” என்று கூறினார்.

;