tamilnadu

கைத்தறி கண்காட்சியில் தள்ளுபடி விற்பனை

கும்பகோணம், ஜன.1- மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து மாநில அளவி லான சிறப்பு கைத்தறி கண்காட்சி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடங்கியது.  கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனையை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் மகாலிங்கம் துவக்கி வைத்தார். கும்ப கோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் ராஜேந்திரன், கோ-ஆப்டெக்ஸ் இயக்கு னர் கே.ஜே.லெனின், திருபு வனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் சிங்.செல்வராஜ் மற்றும் அனைத்து கூட்டுறவு நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இந்த சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் வைக்கப் படும் துணிகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும், பட்டு ஜவுளி களுக்கு 10 சதவீத சங்க கழிவுடன் 20 சதவீத அரசு தள்ளுபடியும் வழங்கப்படு கிறது. குறிப்பிட்ட பட்டு ரக துணிகளுக்கு 35 முதல் 60 சதவீத சிறப்பு கழிவும் வழங்கப்படுகிறது. இக்கண் காட்சியின் மூலம் ரூ.40 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது என திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்க மேலாண்மை இயக்குனர் மகாலிங்கம் தெரிவித்தார்.

;