tamilnadu

img

பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு ஒத்திகை

தஞ்சாவூர், அக்.13- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் நாட்டாணிக்கோட்டை கிராமம் எம்ஜிஆர் நகரில், வருவாய்த்துறை சார்பில் சர்வதேச பேரிடர் தணிப்பு தினத்தையொட்டி விழிப்பு ணர்வு பேரணி, பேரிடர் மீட்புப் பணி மற்றும் ஒத்திகைப் பயிற்சி ஞாயிறு அன்று நடை பெற்றது.  நிகழ்ச்சிக்கு பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேராவூரணி சு.சடையப்பன் (வ.ஊ), கோ.செல்வம் (கி.ஊ), சேதுபாவாசத்திரம் கை.கோவிந்தராசன் (வ.ஊ)வே.கிருஷ்ணமூர்த்தி (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் முன்னணி தீயணைப்பு அலுவலர் மற்றும் நிலைய அலுவலர் (பொ) இரா.செல்வராஜ் தலைமையில் வீரர்கள் மா.ரஜினி, வீ.சீனிவாசன், கா.மணிகண்டன், சே.விக்னேஷ் ஆகியோர் பேரிடர் காலங்களில் மீட்புப் பணி குறித்து பள்ளி மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர். தொட ர்ந்து, பூக்கொல்லையில் உள்ள சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. பொதுமக்களுக்கு துண்டுப்பிரசு ரங்களும் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் என்.ராஜாராம், பேராவூரணி பேரூ ராட்சி இளநிலை உதவியாளர் டி.ராஜேஷ், துப்புரவு மேற்பார்வையாளர் ஆர்.சிவசுப்பிர மணியன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன், பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துக் கிருஷ்ணன், செல்வம், செந்தில், சிவமணி, விஜய், ஜெய்பிர காஷ், சங்கீதா, மோனிஷா மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவி கள் கலந்து கொண்டனர்.