tamilnadu

img

பழுதடைந்த தொகுப்பு வீடுகள் கொள்ளுக்காடு மீனவ மக்கள் அவதி

தஞ்சாவூர், டிச.21- பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடு களில் மழையிலும், வெயிலிலும் மீனவக் குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். புதிதாக வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கூறுகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை தாலுகா அதிராம்பட்டினம் அருகே, சேதுபாவாசத்திரம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட கொள்ளுக்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள அந்தோ ணியார்புரம் பகுதியில், நூற்றுக் கணக்கான மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இப்பகு தியில் சிறுபான்மை இனத்தவர்க ளான கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்த மீனவர்கள் வறுமையான சூழலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
33 ஆண்டான வீடுகள்
இவர்கள் தமிழக அரசால் எம்ஜி ஆர் முதலமைச்சராக இருந்த போது 1986 ஆம் ஆண்டு கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகளில் வசித்து வரு கின்றனர். இந்த வீடுகள் கட்டப்பட்டு தற்போது 33 ஆண்டுகள் கடந்த நிலையில், இடையில் ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகள், சுனாமி, கஜா புயல் போன்றவற்றின் காரண மாக தொகுப்பு வீடுகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் இடிந்து எப்பொழுதும் வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே வீடுகளை இடித்து விட்டு புதிய வீடு கட்டித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த கிராமத் தலைவர் எஸ்.செங்கோல், செயலாளர் சேசு, பொரு ளாளர் செங்கோல்தாஸ், முன்னாள் தலைவர் எல்.அந்தோணி பிச்சை, முன்னாள் செயலாளர் எம்.ஆரோக்கி யம் ஆகியோர் கூறுகையில், “65 மீனவர் குடியிருப்புகளில், சில மாதங்களுக்கு முன்பு, முதல் வரிசை யில் உள்ள 9 வீடுகள் மட்டும், இடிக்கப்பட்டு, புதிதாக காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
மீதமுள்ள 56 வீடுகள் இன்றளவும் இடித்து கட்டித்தரப்படாமல் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது பெய்த தொடர் மழையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வீட்டில் இருக்கும் துவாரங்களின் வழியாக சமயங்களில் விஷப் பாம்பு கள் உள்ளே நுழைந்து விடுகிறது. உயி ரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம்.  மீன்பிடித் தொழிலும் முன்பு போல இல்லை. நாட்டுப்படகு மீனவர்க ளான நாங்கள் சொந்தமாக வீடு கட்ட வும் வழியின்றி, வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். புதிய வீடு கட்டித் தர வருவாய்த்துறை, மீன்வளத்துறை உயர் அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. சென்னை முதல் கன்னியாகுமரி வரை லட்சக்க ணக்கான சுனாமி வீடுகளைக் கட்டித் தந்த தமிழக அரசின் கண்களுக்கு எங்கள் நிலை தெரியவில்லையா... புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் எங்கள் வாழ்வில் விளக்கேற்றுவார் என நம்புகிறோம்”என்றனர்.

;