tamilnadu

குறுவை சாகுபடி பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு மாவட்ட நிர்வாகம் உதவிட விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்

தஞ்சாவூர், ஆக.5- குறுவை சாகுபடி பயிர் காப்பீடு செய்ய முடியாமல் தவித்து வரும் விவசா யிகளுக்கு, மாவட்ட நிர்வாகம் உதவிட  வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவ ட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:  “கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவி ரமாக ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து எட்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் குறு வை சாகுபடி பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் குறுவை சாகுபடிக்கு காப்பீ ட்டு தொகை செலுத்துவதற்கான கால க்கெடு ஜூலை 31 ஆம் தேதியோடு முடி வடைந்து விட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில், கூட்டுறவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, விவசா யிகள் பயிர்க் காப்பீடு செய்ய முடியாமல் சிரமத்தை சந்தித்தனர்.

தனியார்  இணைய மையங்களை நாடி காத்திரு ந்தார்கள். ஆனால் பெரும்பாலான மை யங்களில் ஜூலை 30 ஆம் தேதியோடு முடித்துவிட்டனர். வாங்கவும் மறுத்து விட்டார்கள்.  காரணம், ஏற்கனவே ஒவ்வொரு மை யங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட  விவசாயிகளிடம் பெற்ற காப்பீ ட்டையே செலுத்த முடியாத வகையில்,  இணையதளம் செயல்பாடு நடைபெறா ததால் (வேக குறைவான செயல்பாடு)  அவர்கள் காப்பீடு செய்ய மறுத்து  திருப்பி அனுப்பி விட்டார்கள். அவர்கள்  ஏற்கனவே விவசாயிகளிடம் வாங்கி வைத்த பயிர் காப்பீட்டையும் இணையம் வேகமாக செயல்படாததால் செலுத்த இயலாமல் தேங்கி போன நிலைமை ஏற்பட்டுள்ளது.  

இதனால் பாதிக்கும் மேற்பட்ட விவ சாயிகள் உரிய காலத்தில் பிரீமியம்  செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறும் போது காப்பீடு தொகை பிடி த்தம் செய்யப்பட்டு காப்பீடு செய்யப்ப டும். ஆனால் இந்த ஆண்டு கடன் பெறுவதற்கான வழிமுறைகளில் அரசு  மாற்றம் செய்ததால், மத்திய கூட்டுறவு  வங்கியில்தான் கடன் பெற முடியும்  போன்ற நிலைப்பாட்டால் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு விவசாயி கள் தள்ளப்பட்டார்கள்.  கடன் பெறுவதில் ஏற்பட்ட தடைக ளும், காப்பீடு செய்யும் எளிய வாய்ப்பும்  இல்லாமல் போய்விட்டது. எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயி கள் அனைவரும் பயிர் காப்பீடு திட்ட த்தில் பயனடையும் வகையில் பிரீமியம்  செலுத்த 15 நாட்கள் கால நீட்டிப்பு செய்து தருமாறு, மாவட்ட நிர்வாகம், அரசுடன் பேசி கொரோனாவிலும் கடு மையான சிரமத்தோடு விவசாய பணி யில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உத விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் தஞ்சை மாவட்ட குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

;