tamilnadu

சமய நிறுவன இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா கேட்டு பெருந்திரள் முறையீடு போராட்டம் சிபிஎம் அறிவிப்பு

தஞ்சாவூர் நவ.23- அரசு புறம்போக்கு, கோயில் மடம், வக்ப் போர்டு, கிறிஸ்தவ நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளை நிலங்களில் குடியிருப்போ ருக்கு குடிமனைப் பட்டாவும், குடிமனை இல்லாதோருக்கு இலவச மனைப்பட்டா வும், சாலையோரம், நீர், நிலை புறம்போக்கு களில் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் 26 அன்று தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவ லகங்கள் முன்பும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற உள்ளது.  இதில் கட்சியினர், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “புறம் போக்கு, கோயில் மடம், வக்பு வாரியம், கிறித்தவ நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் தனியார் இடங்களில் குடியிருப்போர் அனைவருக்கும் குடி மனைப்பட்டா வழங்க வேண்டும். ஆட்சேபகரமான இடங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும்.  5 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப் போருக்கு குடியிருப்பு இடத்திலேயே இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். குடிமனை இல்லாத அனைவருக்கும் குடி மனைப்பட்டா வழங்க வேண்டும். சாலையோரம், நீர், நிலைகள், கால்வாய்கள் போன்ற இடங்க ளில் குடியிருப்போருக்கு மாற்று இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.  நகர்ப்புறங்களில் ஆட்சேபகரமான இடங்களில் குடியிருப்போருக்கு, அவர்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் குடி யிருக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும். அரசாணை 318 ஐ முறைகேடு இல்லாமல் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பூதலூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவிடை மருதூர், பாபநாசம், கும்பகோணம், திருவை யாறு உள்ளிட்ட அனைத்து வட்டாட்சியர் அலு வலகங்கள் முன்பும் நவம்பர் 26 காலை 10 மணி அளவில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற உள்ளது.  இதில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள்,  மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், கட்சி முன்னணியினர் கலந்து கொண்டு வழிநடத்த உள்ளனர். இதில் கட்சியினர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனை த்து தரப்பு பொதுமக்கள், குடிமனைப்பட்டா, குடிமனை தேவைப்படும் அனைவரும் கோரிக்கை மனுக்களுடன், அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு பெருந்திரள் முறையீடு போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறும்” கேட்டுக் கொண்டுள்ளார். 

;