tamilnadu

img

வேட்பாளர் பட்டியல் பெயர் வரிசையில் குழப்பம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

தஞ்சாவூர், டிச.30- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு உட்பட்ட 15-ஆவது வார்டு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கான தேர்தல் ஒக்கநாடு கீழையூர் மற்றும் காவாரப்பட்டு ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளியில் திங்கள் கிழமை காலை 7 மணியளவில் துவங்கியது. இந்த வாக்குச்சாவடிகள் ஒக்க நாடு கீழையூரில் ஐந்தும், காவ ராப்பட்டில் மூன்றும், மொத்தத்தில் எட்டு வாக்குச்சாவடிகள் இந்த ஒன்றி யக்குழு தேர்தலுக்காக அமைக்கப் பட்டிருந்தது. வாக்குசாவடிகள் வாக்காளர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தபோது, வாக்குச் சாவடிக்கு வெளியே தேர்தல் அதிகாரிகளால் வைக்கப்பட்டிருந்த அரசுத் தரப்பு விளம்பர சுவரொட்டி யில் திமுக சார்பாக போட்டியிட்ட கலைச்செல்வி பாரத் என்ற வேட்பா ளரின் பெயர் வரிசையின் நான்கா வது இடத்தில் இருந்தது. ஆனால் வாக்குச்சீட்டில் இந்த வேட்பாளரின் பெயர் இரண்டாவது இடத்தில் இருந்தது. இதனால் குழப்பமடைந்த வாக்காளர்களும் திமுக வேட்பா ளரும் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து வாக்காளர்களும், வேட்பாளரும் தேர்தல் அதிகாரி களிடம் முறையிட்டனர். இந்த சம்ப வத்தால் வாக்குப்பதிவு நிறுத்தப் பட்டது. இதுகுறித்து தகவல் அறித்த ஒரத்தநாடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் செங்கமல கண்ணன், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையர் விஜய், வட்டா ட்சியர் அருள்ராஜ் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த திமுக ஒன்றிய செயலாளர் காந்தி வாக்குச்சாவடிக்கு வந்து விவாத த்தில் ஈடுபட்டார். மேலும் வாக்குச் சாவடிக்கு ஒரத்தநாடு எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், உதவி ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சங்கர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சி யர் வேலுமணி ஆகியோர் வாக்குச் சாவடிக்கு சென்றனர். இந்த சம்ப வத்தால் ஒக்கநாடு கீழையூர் வாக்கு சாவடி பரபரப்பு ஏற்பட்டது. அரசால் வழக்கமாக தமிழ் அகர வரிசைப்படி தான் வேட்பாளர்களின் பெயர் தேர்தல் அதிகாரிகளால் உரு வாக்கப்பட்டு அது சுவரொட்டிகள் ஒட்டப்படும், வாக்குச்சீட்டில் எந்த மாதிரியான வரிசையில் இருக்கிற தோ அதே வரிசையில் தான் அரசு மூலமாக வெளிப்பகுதியில் விளம்ப ரம் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், வாக்கு சீட்டில் வேறு மாதிரியும், வெளிப்புறம் விளம்பரம் செய் யப்பட்ட சுவரொட்டியில் வேறு மாதிரியும் இருந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகளும், திமுக நிர்வாகிகளும் மற்ற வேட்பா ளர்களும், காவல்துறை அதிகாரி களும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, வாக்குச்சாவடியில் வெளியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு, வேறு சுவரெட்டி சரியாக ஒட்டப்பட்டது. இதையடுத்து காலை 9 மணி முதல் 11.30 மணி வரை என இரண்டரை மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் துவங்கி நடைபெற்றது.

;