tamilnadu

img

தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே நல்லாசிரியர் விருது பெற்ற, குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகர னுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கி.வயிரவன் தலைமை வகித்தார். பொருளாளர் சு.முத்துவேல் வரவேற்றார்.  முன்னாள் ஒன்றிய தலைவர் ஆ. பழனிவேலு, ஊராட்சி தலைவர் சோ. வைரவன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கு.சின்னப்பா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு வாழ்த்திப் பேசினார். கடலூர் ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் விருது பெற்ற சிறப்புரை யாற்றினார்.  உயர்கல்வித்துறை முன்னாள் இணை இயக்குநர் வீ.இராசகோபால், ஓய்வு பெற்ற காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் க.மாணிவாசகம், வி.எம்.தமிழ்செல்வன், ஆர்.என்.ஆர்.மகாலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பி னர் நாடியம் சிவ.மதிவாணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், ஊராட்சி துணைத் தலைவர் இந்திரா வைரவன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் செ.பன்னீர் செல்வம், அ.ஜெயராமன் வாழ்த்திப் பேசினர். தலைமை ஆசிரியர் வீ.மனோகரன் ஏற்புரையாற்றினார். முதுகலை ஆசிரியை ஆ.சித்ரா நன்றி கூறினார்.  இப்பகுதியைச் சேர்ந்தவரும், கடலூர் ஆட்சியருமான வெ.அன்புச் செல்வன், தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலை யினை தலைமை ஆசிரியரிடம் வழங்கி னார். இந்த தொகையை வங்கி நிரந்தர வைப்புத் தொகையில் வைத்து, அதிலிருந்து வரும் வட்டித் தொகை மூலம், சிறப்பிடம் பெறும் 10, 11,12 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கு மாறு கேட்டுக் கொண்டார். மேலும் அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தொடங்கி வைத்தார். 113 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது.