tamilnadu

img

கும்பகோணத்தில் குடிமராமத்து பணிகள்  

 கும்பகோணம், செப்.19-  குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையின் நீர்வளத் துறை சார்பில் கும்பகோணம் உப கோட்ட பகுதியில் பாசன வாய்க்கால்கள் ஆறுகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அப்பணிகள் பயன்பெறும் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் பங்களிப்போடு தூர்வாருதல் அடைப்பு பலகை தடுப்பு சுவர் கட்டுதல் போன்ற பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.  இதனை திம்மா குடி கிராமம் இன்னம்பூர் வாய்க்கால் தலைப்பு மதகு கொற்கை கிராமம் போற் கலக்குடி வாய்க்கால் மேலப்பளையார் கிராமம் கீழபழையார் வாய்க்கால் பட்டிஸ்வரம் முதல் உடையாளூர் வரை உள்ள முடி கொண்டான் ஆற்றுப் பகுதி உள்ளிட்ட வாய்க்கால்களை காவிரி வடிநிலம் கும்பகோணம் உப கோட்ட உதவி செயற் பொறியாளர் மாரிமுத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.