tamilnadu

img

குறுவட்ட விளையாட்டுப் போட்டி  பேராவூரணி மாணவிகள் முதலிடம்

 தஞ்சாவூர், செப்.7- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், குறுவட்ட அள விலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் இரு தினங்கள் நடைபெற்றன.  பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ரா.ஜெயபால் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஏ.கருணாநிதி வர வேற்றார். சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்து பேசி னார். காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் அணி வகுப்பு மரியாதை ஏற்றார்.  நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 16 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண் டனர். இதில் ஆண்கள் பிரிவில் 100.5 புள்ளிகளுடன் பேரா வூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 87.5 புள்ளிகளுடன் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், 31 புள்ளிகளுடன் செங்க மங்கலம் அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றனர்.  பெண்கள் பிரிவில் 132 புள்ளிகளுடன் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 120 புள்ளிகளுடன் பெருமகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், 50 புள்ளிகளுடன் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றனர்.  தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன், பொருளாளர் ஆர்.பி.ராஜேந்திரன், துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, முதுகலை ஆசிரியர் கே.சற்குணம், குருவிக்கரம்பை பள்ளி தலைமையாசிரியர் வீ.மனோகரன், செங்கமங்கலம் பள்ளி தலைமையாசிரியர் எம்.கணேசன், உதவி தலைமை ஆசிரியர் கே.சோழபாண்டியன், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் குமாரவேல் கலந்து கொண்டனர். நிறைவாக உடற்கல்வி ஆசி ரியர் மா.சோலை நன்றி கூறினார்.