tamilnadu

img

கால்நடைகளுக்கு கடுக்கன் குழப்பமும் குளறுபடியும்

தஞ்சாவூர், பிப்.27- தமிழகத்தில் கால்நடைகளுக்கு கடுக்கன் (காது வில்லை). அணி விக்கும், திட்டத்தில் குழப்பமும், குளறு படிகளும், நிறைந்துள்ளன. கால்நடை மருத்துவர்களை இத்திட்டத்தில் ஈடு படுத்துவதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. இந்திய அளவில் கால்நடை களுக்காக செயல்படுத்தப்படவிருக் கும் தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தை (NADCP) தமிழகத்தில் எவ்வித முன் னேற் பாடுகளுமின்றி செயல்படுத்த நினைப்பதால் பல்வேறு குழப்பங்க ளும் குளறுபடிகளும் ஏற்படும் என்ப தில் ஐயமில்லை. இத்திட்டத்தின்கீழ் 4 மாத வயதிற்கு மேலுள்ள அனைத்து மாடுகளுக்கும் பன்னிரெண்டு இலக்க எண்களுடைய காது வில்லைகள் மாடுகளின் இடது காதில் பொருத்தப்பட்டு மாடுகள் அடை யாளமிடப்படவேண்டும். இவ்வாறு அடையாளமிடப்பட்ட மாடுகள் உரிமை யாளரின் ஆதார் எண், தொலைபேசி எண், முகவரி போன்றவற்றோடு கணினியில் இணையவழி பதிவேற்றம் செய்யப்படவேண்டும். உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய திட்டம் தான். எனினும் செயல்படுத்துவதிலுள்ள நடை முறைச் சிக்கல்களை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்ற கருத்து நிலவு கிறது. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை தோராயமாக 1 கோடியே 20 இலட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை இருபத்தைந்து விழுக்காடு காது வில்லைகள் மட்டுமே வழங்கப் பட்டுள்ளன. அவையும் முழுமையாக பொருத்தப்படவோ கணினியில் பதி வேற்றம் செய்யப்படவோ இல்லை.இன்றைய சூழ்நிலையில் ஐம்பது விழுக்காட்டுக்கும் மேல் கால்நடை பரா மரிப்புத் துறை பணியிடங்கள் காலி யாக உள்ளன. உதவியாளர்கள் இல் லாத நிலையிலேயே ஒரு கால்நடை மருத்துவர் மட்டுமே அனைத்துப் பணி களையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. அரசின் நலத்திட்டங் கள் அனைத்தும் அந்தந்த நிதியாண்டி லேயே எவ்வித சுணக்கமுமின்றி நூறு விழுக்காடு இருக்கின்ற கால்நடை மருத்துவர்களை வைத்து நடை முறைப் படுத்தப்படுகிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் கோமாரிநோய்த் தடுப்பூசி பணி ஒரு நாளைக்கு ஒரு குழுவால் நூற்றைம் பது மாடுகளுக்கு தடுப்பூசி போட்டால் போதுமானது. இருப்பினும் ஆள் பற்றாக்குறையால் சராசரியாக இரு நூற்றைம்பது மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் இந்த முறை மத்திய அரசின் ஆணை என்கிற ஒற்றைக் காரணத்தைக் காட்டி மாடு களுக்கு காது வில்லைகள் பொருத்து தல், அதற்குரிய தகவல்களை இணையவழி பதிவேற்றம் செய்தல், தடுப்பூசி போடுதல் என மூன்று பணி களையும் செய்ய வேண்டும் என்ப தோடு, காதுவில்லைகள் போட்டுக் கொள்ள மறுக்கின்றபோது எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற விளக்கமும் அளிக் கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கால்நடை மருத்து வர்களிடம் கேட்டபோது, “கால்நடைத் துறையில் 50 விழுக்காடு பணி யிடங்கள் நிரப்பப்படாமல், காலியாக உள்ளது. தடுப்பூசி பணிகளுக்கே, கால்நடை மருத்துவர்கள் கடும் சிர மத்திற்கு இடையே பணி செய்து வரு கின்றனர். காது வில்லை அணிவித்து, அதில் அனைத்து விபரங்களையும், பதி வேற்றம் செய்ய வேண்டும். கிட்டத்தட்ட மாடுகளின் மொத்த ஜாதகத்தையும் பதிவு செய்ய வேண்டும். என்ன நிறம், என்ன வகை மாடு, ஆணா, பெண்ணா, குட்டி ஈன்றதா, என விடுபடாமல் பதிவு செய்ய வேண்டும்.  விழிப்புணர்வு இல்லாத கிராமப்புற மக்களிடையே மாடுகளுக்கு தடுப்பூசி போடவே அல்லாட வேண்டியுள்ளது. பால் கறக்கும் தன்மை குறைந்து விடும். கன்றுக்குட்டி வெளித் தள்ளி விடும் என போதிய விழிப்புணர்வு இன்றி மறுப்பு தெரிவிப்போர் ஏராளம் பேர் உள்ளனர். இந்த பதிவினை கால்நடை மருத்துவர்கள் தங்கள் சொந்த ஏற்பாட்டிலேயே செய்ய வேண்டும். இதற்கு கணினி வசதியோ, ஆண்ட் ராய்ட் மொபைல் போன் வசதியோ தாங்களே செய்து கொள்ள வேண்டும். அரசால் தரப்பட்ட உதவாக்கரை டேப்லெட் போன் பழுதடைந்து செயல் படாத நிலையில் உள்ளது. எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியுமின்றி கால்நடை மருத்துவர்களை பதிவேற் றம் செய்யும் பணியில் ஈடுபடுத்தினால், மருத்துவம் யார் பார்ப்பது எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
தனிப் பிரிவு தேவை
இதற்கு முன்பு தேசிய வெக்கை நோய் ஒழிப்புத்திட்டம் செயல்படுத்தப் பட்ட போது, அதற்காக மாநில அள விலும், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலும் சிறப்புப் பிரிவு உருவாக்கப் பட்டு இந்தியாவில் வெக்கை நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. தற்போது கேரளா மாநிலத்தில் இப் பணிக்கு தனியாக தடுப்பூசி பணி யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று தமிழகத்திலும் தனிப் பிரிவு அமைக்கப்படவேண்டும். அது வரை தடுப்பூசிப்பணியை மட்டும் கடந்த சுற்றுகளைப் போல மேற்கொள் வதற்கு எந்த கால்நடை மருத்துவரும் தயங்கவில்லை” என்கின்றனர். மேலும், மாடுகளுக்கு கடுக்கன் வில்லை அணி விக்க சென்றால், இது எதற்காக? வங்கிக் கடன் தருவீர்களா? இன்சூ ரன்ஸ் போடுவீர்களா? இல்லை வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பும் பொதுமக்களுக்கு பதில் அளிக்க முடியாமல் கால்நடை மருத்துவர்கள் திணறுகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, சுமார் 3 லட்சத்து 25 ஆயிரம் கால்நடைகள் இருக்கும் போது, கடந்த 2 வருடத்தில், 60 ஆயி ரம் வில்லைகள் மட்டும் ஒதுக்கப் பட்டு, அதிலும் 25 ஆயிரம் மாடு களுக்கு மட்டுமே, வில்லைகள் போடப்  பட்டுள்ளன. ஆனாலும் முழுமையாக விபரங்கள் பதிவேற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் கார ணமாக கால்நடை மருத்துவர்கள் போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆள் பற்றாக் குறையால் அவதியுறுகிற இந்நேரத் தில், சரியான திட்டமிடாமல் செயல் படுத்தப்பட முனைப்பு காட்டுகிற எந்த திட்டமும் குழப்பத்தையும் குளறுபடி களையுமே உண்டாக்கும் என்பதே எதார்த்தமான உண்மை.  (ந.சி.நி)