கும்பகோணம்,மார்ச் 14- தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருப்பாலத்துறை யில் ஆசிரியர், கவிஞர் இராம பாரதி எழுதிய சோழ நங்கை நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. புலவர் கூத்தரசன் தலைமை வகித்தார். பாபநா சம் உலக திருக்குறள் மைய செயலாளர் ஜெயராமன், தேசிய நல்லாசிரியர் கலைச் செல்வன், ஓய்வு பெற்ற கரு வூல அலுவலர் அன்பழகன், சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் சிவ சங்கரன் வரவேற்று பேசி னார். ராணி கலைமணி நிகழ்ச்சியை துவக்கி வைத் தார். சிங்கப்பூர் தமிழாசிரியர் புலவர் திருநாவுக்கரசு சோழ நங்கை நூலினை வெளியிட்டு பேசினார். முதல் பிரதியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை துரை. பௌலின் வளவனரசு பெற்றுக்கொண்டார். ஓய்வு பெற்ற தமிழ் துறை தலைவர் டாக்டர் ஆறு. காளிதாசன், ஏரோநாட்டிக்கல் ராஜ ராஜேஸ்வரி ஆகியோர் சோழ நங்கை சொல்வது என்ன என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ் ஆசிரியர் சிங்காரவேலு, தலைமையாசிரியர் வசந்தா, உதவி பேராசிரியர் அறிவழ கன், ஆசிரியர்கள் செங் கதிர்செல்வன், மோகன், சங்கர், எல்ஐசி முகவர் ஆசைத் தம்பி, சமூக ஆர்வலர் அப்துல் ரகுமான் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். நூலாசிரியர் இராம பாரதி ஏற் புரை வழங்கினார். உலக திருக் குறள் மைய துணைத்தலை வர் கோடையிடி குருசாமி நன்றி கூறினார்.