தஞ்சாவூர் நவ.21- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பேராவூரணிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் கொன்றைக்காடு கிராமத்தில் தனியார் (இந்தியா 1) நிறுவ னத்தின் ஏ.டி.எம் கடந்த 5 வருடமாக இயங்கி வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இயந்திரம் உடைக்கப்பட்டும் பணத்தை எடுக்க முடியவில்லை. காலை யில் இயந்திரம் உடைந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரி வித்தனர். ஏடிஎம் நிறுவனத்தின் அதிகாரிகள் இயந்திரத்தை திறந்து சோதனை செய்த போது கணக்கில் உள்ளபடி இருப்பு பணம் 50 ஆயிரத்து நூறு சரியாக இருந்ததாக தெரி வித்தனர். இது குறித்து பேராவூரணி காவல் துறையினர் விசாரணை செய்து வரு கின்றனர்.