tamilnadu

பெரியகோயில் குடமுழுக்கு ஏற்பாடுகள்

தஞ்சாவூர், ஜன.31- பிப்.5 ஆம் தேதி நடைபெற வுள்ள தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் ஆட்சியர் தெரி வித்ததாவது: பிப்.5 அன்று தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ளுர் விடுமுறை அறிவிக் கப்பட்டுள்ளது.  வெளியூரிலிருந்து வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் வசதிக்காக தஞ்சாவூர் புதுப் பட்டினம் மற்றும் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கும்ப கோணம் ஆகிய ஊர்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு புதிய பேருந்து நிலையம் அருகே தற்கா லிகமாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையமும், நாகப்பட்டி னம், திருவாரூர், மன்னார்குடி, பட்டுக் கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வருகைதரும் பக்தர்களுக்காக புதுப் பட்டினம் தற்காலிக பேருந்து நிலை யமும் செயல்பட உள்ளது. வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்களுக்கு கூடுதலாக 225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 125கட்டணமில்லா சிறப்பு வாகனம் மூலம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் ரயில் நிலையம் மற்றும் பெரிய கோ விலை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தற் காலிக பேருந்து நிறுத்தங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 பேட்டரி கார்கள், 130 மாற்றுத் திறனாளிகளுக்கான இரு சக்கர நாற்காலிகள் ஆகியவை பெரிய கோவில் அருகே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகள்
பெரிய கோவில் சுற்று வட்டா ரங்களில் 21 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப் பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக வாகன நிறுத்துமிடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, தகவல் மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதி யோர்களுக்கு உதவிடும் வகையில் 1,500 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடமுழுக்கை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகரில் பக்தர்கள் கூடும் இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 225 சுகாதாரமான குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  238 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. 800 இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப் பட்டு, குப்பைகளை உடனுக்குடன் அகற்றிடும் வகையில் 25 குப்பை லாரிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. தூய்மை பணிகளின் கீழ் தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்போடு தினந்தோ றும் தஞ்சாவூர் மாநகரத்தை தூய் மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வெளியூரிலிந்து வரக்கூடிய பக்தர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் அனைத்து இடங்களிலும் வழி காட்டும் பலகைகள் அமைக்கப் பட்டுள்ளன. பெரிய கோவில் குட முழுக்கு தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ள “நம்ம தஞ்சை” என்ற பெயரில் செயலி உரு வாக்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறை மூலம் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 1 அன்று முதல் 5 அன்று வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. பக்தர்கள் நெரிசல் இல்லாமல் எந்தவித சிரமுமின்றி எளிதாக குடமுழுக்கு தரிசனம் செய்வதற்கு பெரிய கோவில் உள்ளே 30 இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு மிகவும் பாது காப்பாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் குடமுழுக்கை நெரிசல் இல்லாமல் சுலபமாக தரி சனம் செய்ய சிறப்பு நுழைவாயில்க ளும், வெளியே செல்லும் வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்கு பாதுகாப்பு பணியில் 4 ஆயிரத்து 492 காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேம ராக்கள், 17 காவல் உதவி மையம், 55 தகவல் அறியும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இலச்சினை வெளியீடு 
தொடர்ந்து, தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா இலச்சி னையை மாவட்ட ஆட்சியர் வெளி யிட்டார். இந்நிகழ்வின் போது தஞ்சா வூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

;