tamilnadu

மாடுகளை அவிழ்த்து விடும் நிகழ்ச்சி  

தஞ்சாவூர், ஜன.19- தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் உள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலய வளாகத்தில் கிருஸ்தவ பொதுமக்கள் ஒன்று கூடி பொங்க லிட்டு சிறப்பு வழிபாடு செய்தததைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை  ஊரில் உள்ள அனைத்து மாடுகளும் அவிழ்த்து விடும் நிகழ்ச்சி நடை பெற்றது.   பின்னர் மாலை அந்தோணியார் ஆல யத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். இந்த ஆண்டு விவசாயம் செழிக்கவும், மக்கள் அனைவரும் சமத்துவத்துடனும் சகோரத்து வத்துடனும் வாழவும் வழிகாட்டி வரும் புனித வனத்து அந்தோணியாருக்கு நன்றி கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆல யத்தின் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமை வகித்தார். உதவி தந்தை விக்டர் அலெக்ஸ் முன்னிலை வகித்தார்.  முன்னதாக,  நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிராம மக்கள்  அனைவருக்கும் சந்தனம் வெற்றிலை பாக்கு கொடுத்து வரவேற்கப்பட்டனர்.  இந்த ஆண்டு பொங்கல் விழாவை நடத்திய 10 வது கரைகாரர்கள், அடுத்தாண்டு பொங்கல் விழாவை நடத்த உள்ள 1 வது கரைகாரர்களுக்கு மரியாதை செய்தனர். 

;