tamilnadu

img

தேசியக் கொடிகளை பார்த்து உலக நாடுகளின் தலைநகரம், வரலாற்றை கூறும் 6 வயது சிறுவன்

தஞ்சாவூர், ஏப்.25-6 வயது சிறுவன் உலகத்தில் உள்ள196 நாடுகளின் கொடிகளை வைத்து அந்நாட்டின் தலைநகரம், வரலாற்றை கூறி அசத்தி வருகிறார். தஞ்சாவூர் அழகம்மாள் நகரைச்சேர்ந்தவர் ஞானசுந்தரம். இவர் சிட்டி யூனியன் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சவுமியா அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். இவர்களது மகன் மனோமிதன்(6), தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம்வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மனோமிதன் பள்ளியில் பொதுஅறிவு போட்டியில் கலந்துக்கொண்டு, முதல் இடம் பிடித்துள்ளார்.இதை தொடர்ந்து அவரின் திறமையை கண்டு, பெற்றோர்கள் பொது அறிவு தொடர்பான பயற்சிகளை கடந்த5 மாதங்களாக அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மனோமிதன் அவனது பெற்றோரிடம் சில நாட்டின் தேசியக் கொடிகளை காட்டி அதன் தலைநகரையும், வரலாற்றையும் கூறியுள்ளார். பின்னர், மனோமிதனிடம் பெற்றோர்கள், 196 உலக நாடுகளின் கொடிகளை காட்டி கேட்டபோது, அது எந்த நாட்டுடையது, அதன்தலைநகரம், வரலாறு, எத்தனை கண்டங்கள் உள்ளன என்பதை துல்லியமாக கூறுவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். மேலும், இந்தியாவில் இதுவரைபதவி வகித்த குடியரசுத் தலைவர் கள், குடியரசு துணைத் தலைவர்கள், பிரதமர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் பற்றியும் அவர்கள் யார், யார், எத்தனை ஆண்டுகள் பதவியில் இருந்தனர். அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் என அனைத்தையும் நிமிடத்தில் சிறிதும் யோசிக்காமல் உடனுக்குடன் கூறி வருகிறார். அதேபோல் இந்தியாவில் உள்ள கடல்களின்பெயர்கள், அவற்றின் தன்மை மற்றும் எந்தெந்த கடலில் என்னென்ன வகைஉயிரினங்கள் வாழ்கின்றன என்பதையும் கூறி வருகிறார்.இந்நிலையில் புதன்கிழமை அப்பகுதியில் உள்ள அரசு நுாலகத்தில் வாகர்கள் வட்டம் சார்பில் நடந்தவிழாவிலும் 196 நாடுகளின் கொடியைவைத்து தலைநகரத்தை கூறி அசத்தியுள்ளார். இதனைக் கண்ட வாசகர் வட்ட நிர்வாகிகள் மாணவனைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து மாணவனின் தாய் சவுமியா கூறுகையில், “அடுத்த கட்ட முயற்சியாக இந்திய வரைபடத்தை கொண்டு அனைத்து நாடுகளுக்கு செல்லும் வழிகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளோம். கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

;