tamilnadu

img

ஐபிஎல் தொடர் நடக்குமா?   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா

துபாய்
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் (13-வது சீசன்) ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்கள் அங்குள்ள ஹோட்டலில் 6 நாட்கள் தனிமையில் இருந்து பின்னர் தங்களது அணியுடன் பயிற்சிக்குத் தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் களமிறங்குகிறது. தற்போது அணியில் உள்ள அனைத்து வீரர்களும் கடந்த 21-ஆம் தேதி துபாய் சென்றனர். 6 நாட்கள் தனிமைக்கு பின் சென்னை அணி  வீரர்கள் நேற்று பயிற்சியை தொடங்க இருந்தனர். பயிற்சிக்கு முன் சென்னை அணி குழுவிற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் சென்னை அணியின்  வலதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும், அணியின் உதவியாளர்கள், வலை பயிற்சி பந்துவீச்சாளர்கள் என மொத்தம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அணி நிர்வாகத்தினர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை அணியில் இன்று மேலும் ஒரு வீரருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சென்னை அணி குழுவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.  

அடுத்து என்ன?
சென்னை அணியில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருப்பதால ஐபிஎல் தொடையில் சென்னை அணி பங்கேற்குமா? இல்லை ஐபிஎல் தொடரே ரத்து செய்யப்படுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்    

;