tamilnadu

img

தூத்துக்குடி அணி உரிமையாளர்களுக்குச் சிக்கல்

டிஎன்பிஎல் சூதாட்டம் 

ஐபிஎல் போட்டியைப் போன்று தமிழக வீரர்கள் மட்டும் பங்கேற்கும் டிஎன்பிஎல்  தொடரில் விளையாடிய வீரர்களைச் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு (பிசிசிஐ) ரகசிய கடிதம் பறந்தது. துரித விசார ணை நடத்த பிசிசிஐ உத்தரவிட்ட நிலை யில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இது தொடர்பாக விசாரணைக் குழு அமைத்தது.  இந்நிலையில் விசாரணைக் குழு அறிக்கையின் படி தூத்துக்குடி அணியின் (டூட்டி பேட்ரியாட்ஸ்) இரு இணை உரிமையாளர்கள் மீது  சந்தேகம் இருப்பதாகக் கூற டிஎன்பிஎல் நிர்வாகம், அவர்களை உடனடியாக டிஎன்பிஎல் உரிமையாளர் பொறுப்பி லிருந்து நீக்கியது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு டிஎன்பிஎல் அணியும் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.