tamilnadu

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வெல்வது யார்?

பிரபல கிராண்ட்ஸ்லாம் தொட ரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதியாட்டம் சனியன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தரவரிசை இல்லாமல் களமிறங்கிய முன்னணி நட்சத்திரமும், அதிரடி நாயகியுமான ஸ்பெயினின் முகுருசா,14-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் சோபியா ஹெனினை எதிர்கொள்கிறார்.    ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றி இந்த வருடம் முழுவதும் பார்ம் பிரச்சனை இல்லாமல் விளையாடும் முனைப்பில் இரு வீராங்கனைகளும் கடும் பயிற்சியுடன் களமிறங்குகின்றனர். இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.     

யாருக்கு சாதகம்?

வயதிலும், அனுபவத்திலும் முகுருசா (26) தான் சீனியர். பிரெஞ்சு, விம்பிள்டன் போன்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை (தலா ஒருமுறை) வென்றுள்ள முகுருசா  முதன் முறை யாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். கத்துக்குட்டி வீராங்கனையான ஹெனின் (21)  தந்திரமாக விளையாடக் கூடியவர். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டி க்கு முன்னேறியுள்ள ஹெனின் முந்தைய கிராண்ட்ஸ்லாம் வரலாற்றில் அவர் 4-வது சுற்றுக்கு மேல் முன்னேறி யது கிடையாது. இதனால் மகளிர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை கைப்பற்ற முகுருசாவுக்கு 70% வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.   

இருவரும் சொந்த நாட்டிற்காக விளையாடவில்லை 

முகுருசா ஸ்பெயின் நாட்டில் தங்கி யிருந்தாலும் தென் அமெரிக்க கண்டத்தின் முக்கிய எண்ணெய் வள மிக்க நாடான வெனிசுலாவில் பிறந்தவர். இதே போல ஹெனின் அமெரிக்காவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் ரஷ்யாவில் பிறந்தவர். இருவரும் சொந்த நாட்டிற்காக விளையாடாமல் தான் குடியேறிய நாட்டிற்காக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

;