tamilnadu

img

அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றிலேயே மாரத்தான் இன்னிங்ஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டி களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது முதல் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.

ஆடவர் ஒற்றையர் 

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை வீரரும், அதிரடிக்குப் பெயர் பெற்றவருமான ஆஸ்திரியாவின் டோம்னிக் தியம், இத்தாலியின் தாமஸ் பஃபியானோவிடம் 4-6, 6-3, 3-6, 2-6 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார். இதே போலத் தரவரிசை யில் 9-வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் காச்சானோவ், தரவரிசையில் இல்லாத கனடாவின் போஸ்பிஸிலியிடம் 6-4, 5-7, 5-7, 6-4, 3-6 என்ற செட்கணக்கில் வீழ்ந்தார்.

மகளிர் ஒற்றையர்

மகளிர் ஒற்றையர் பிரிவில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஸ்டீபன்ஸை, தரவரிசையில் இல்லாத ரஷ்யா வின் கலின்ஸ்கயா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் புரட்டி எடுத்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.  முதல் சுற்றில் வெளி யேறிய டோம்னிக் தியம், காச்சானோவ், ஸ்டீபன்ஸ் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் சூப்பர் பார்மில் உள்ள அதிரடிக்குப் பெயர் பெற்றவர்கள். இவர்களைத் தரவரிசையில் இல்லாத கத்துக்குட்டிகள். ஈவிரக்கமில்லாமல் புரட்டியெடுத்து அடுத்த சுற்றுக்கு முன் னேறியது டென்னிஸ் உலகில் கடும் அதிர்ச்சி யலையை ஏற்படுத்தியுள்ளது.  வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னே றிய பல முன்னணி நட்சத்திரங்கள் மராத்தான் இன்னிங்ஸ் போலப் போராடித் தான் 2-வது  சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பதால் அமெ ரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வழக்கத்திற்கு மாறாகத் தொடக்கத்திலேயே சுவாரஸ்யமாக நகர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

;