ஜப்பான் நாட்டில், விமானங்களில் குழந்தைகளுக்கென ’பேபி சீட் மேப்’ (Baby Seat Map) என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கைக்குழந்தைகளுடனும், வளர்ந்த சிறுவர்களுடனும் விமானங்களில் பயணிப்பது மிகவும் சவாலாகவே இருக்கும் நிலையில், ஜப்பான் நாட்டில், விமானங்களில் குழந்தைகளுக்கென ’பேபி சீட் மேப்’ (Baby Seat Map) என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கான இருக்கைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். எனவே குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் குறித்த இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
அதே போல், குழந்தைகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் மற்ற பயணிகளும், குழந்தைகளுக்கான இருக்கைகள் இருக்கும் இடத்தை தவிர்த்து மற்ற இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். மேலும் இந்த குழந்தைகளுக்கான இருக்கைகளை பிறந்த 8 நாட்கள் தொடக்கம் 2 வயது வரையான குழந்தைகளுக்காக பயன்படுத்த முடியும் என ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.