tamilnadu

உழவர் சந்தையில் காய்கறிகள் தேக்கம் - விவசாயிகள் ஆட்சியரிடம் புகார்

இளம்பிள்ளை, ஆக. 12 - உழவர் சந்தை இருந்த இடத்தில் வேறு கடைகள் போடப் பட்டு விற்கப்பட்டு வருவதால், உழவர் சந்தை விவசாயி களின் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந் ததுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர். இதுகுறித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, இளம் பிள்ளை சந்தப்பேட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும்  உழவர் சந்தையில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை சுழற்சி முறையில் விற் பனை செய்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலை யில், கொரோனா தொற்றின் காரணமாக இளம் பிள்ளை சந்தப்பேட்டை மாரியம்மன் கோவில் திடலில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தை யானது தடை செய்யப்பட்டது. ஆனால், அவ்விடத்தில் தினந்தோறும் 200-க்கும் மேற்பட்ட கடைகள் போடப் படுவதால் உழவர் சந்தை விவசாயிகளின் காய்கறிகள் விற்பனை ஆகாமல் உள்ளன. மேலும், உழவர் சந்தை இருக்கும் இடத்தில் 100 மீட்டர் தூரத்திற்கு காய்கறிக் கடை கள் எதுவும் இருக்கக் கூடாது என அரசாணை இருந்தும் இக்கடைகள் தினந்தோறும் விற்பனை செய்து வருவ தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அம்மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;