tamilnadu

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு 

 மேட்டூர்,செப்.5- கர்நாடக மாநிலத்தில் உள்ள  கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணை களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அந்த  அணைகளுக்கு நீர் வரத்து அதிகரி த்துள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்தும் காவிரியில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 124.80 அடி அளவுக்கு நீரை தேக்கும் உயரம் கொண்ட கிருஷ்ண ராஜ சாகர் அணை முழுமையாக நிரம்பி யுள்ளது. அணைக்கு விநாடிக்கு 18 ஆயிரத்து 210 கனஅடி நீர்வரும் நிலையில், அணையிலிருந்து 24  ஆயிரத்து 511 கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது. 84 அடி நீரை தேக்கும் உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 83.23 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 21 ஆயிரத்து 962 கனஅடி யாக உள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் நீர் வெளியேற்றப்படுகிறது. இரு அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு மொத்தம் 54,511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தமிழக- கர்நாடக எல்லை பகுதியில் விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலை யில் மேட்டூர் அணையின் நீர்வரத்து 26 ஆயிரமாக அதிகரித்துள்ளது. வியாழனன்று காலை 8 மணியளவில் 115.85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலை 4 மணியளவில் 116.02 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி-டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு 87.26 டிஎம்சியாக உள்ளது.

;