tamilnadu

img

ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

பென்னாகரம், ஆக.10- கர்நாடக அணைகளில் இருந்து சனியன்று சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் வரத்து காரணமாக ஒகே னக்கல் நீர் வீழ்ச்சியில் குளிக்கவும், பரிசல் இயக் கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து ஒரு லட்சம்  கனஅடியாக அதிகரித்துக் கொண்டு வருவ தால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவ  மழை காரணமாக கபினி அணை முழு கொள்ளளவு எட்டி உள்ளது. இதனால் அணையிலிருந்து லட்சத்து 25 ஆயிரம் கன  அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது. இதேபோல் தாரகா தடுப்பணையில் இருந்து 15 ஆயிரம் கன அடியும், நுகா தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி என மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ் சாகர் அணையில் இருந்து 500 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிலிகுண்டுவிற்கு  வினாடிக்கு 6 ஆயிரம் கன  அடியாக இருந்த நீர்வரத்து,  படிப்படி யாக அதிகரித்து வெள்ளியன்று மாலை  50ஆயிரம் கன அடியாக வந்தது. சனிக் கிழமை காலை முதல் ஒகேனக்கல்லில் ஒரு  லட்சம் கன அடி நீர் வந்துள்ளதால், ஒகே னக்கல்  காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா  பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 3வது நாளாக தடை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு  கூடுதல் உபரி நீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ள தால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒகேனக்கல் பகுதியில் தீய ணைப்பு துறையினர் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.