கோபிசெட்டிபாளையம், அக்.8- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப் பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையினால் ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகத்துக்குட்பட்ட வினோ பாநகர் அருகில் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந் துள்ளது. குண்டேரிப்பள்ளம் அணை 42 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர் மட்டம் கடந்த ஆறு மாதங்களாக குறைந்து வந்தது. குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் போனதால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து 20 அடியில் இருந்தது. இந்நிலையில் திங்களன்று குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான விளாங்கோம் பைகுன்றி மல்லியம்மன் துர்க்கம் கம்மனூர் உள்ளிட்ட வனப்பகுதியில் கனமழைபெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து செவ்வாயன்று அதிகாலை முதல் அதிகரிக் கத் தொடங்கி மாலையில் நீர் மட்டம் 8 அடி உயர்ந்துள் ளது. இதில் அணையின் நீர் மட்டம் 20.62 அடியிலிருந்து 28.26 ஆக அடியாக உயர்ந்துள்ளது. அதன் பின்னர் அணைக்குவரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் இதேபோல் மழை தொடர்ந்தால் அணையின் முழுகொள்ளளவான 42 அடியை எட்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அணையில் தான் அதிகளவு வன விலங்குகள் நீர் அருந்த வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து வந்தது வேதனை அளித்துவந்தாகவும், தற்போது நீர் மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வினால் ஒருவருட காலங் களுக்குமேல் வனவிலங்குகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி யாகும் என வனத்துறையினரும், நிலத்தடிநீர் மட்டம் வெகு வாக உயர்ந்து விவசாயத் தேவைகள் பூர்த்தியாகும் என விவசாயிகளும் மகிழ்சியடைந்துள்ளனர்.