tamilnadu

மதுக்கடைகள் இன்று மூடல்

சேலம், மே 22-நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு இன்று (மே 23)சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள், மதுக்கூடங்கள் மூடப்படும் என மாவட்டஆட்சியர் தெரிவித்துள்ளர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி ரா.பாஜிபாகரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, சென்னை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையரின் உத்தரவின்படி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல்வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டுமே 23 ஆம் தேதியன்று(வியாழக்கிழமை) மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே,இன்று நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மேலும், மேற்கண்ட நாளில்மதுபானம் விற்பனை செய்யக் கூடாதுஎனஅறிவிக்கப்படுகிறது. இதை மீறி மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

;