tamilnadu

img

பெட்டிகள் கொண்டு சென்ற வாகனத்தை மறித்து அனைத்து கட்சியினர் போராட்டம்

இளம்பிள்ளை, ஜன.2- இளம்பிள்ளை அருகில் வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே பெட்டிகள் கொண்டு  செல்லப்பட்ட வாகனத்தை அனைத்து அரசியல் கட்சியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் பதிவான வாக்குகளை இளம் பிள்ளையை அடுத்துள்ள பெருமா கவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் எண்ணும் பணி  நடைபெற்று வந்தது. இந்நிலையில்  வெளியில் இருந்து பெட்டிகளோடு  வாகனம் ஒன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே செல்ல  முற்பட்டன. அப்போது அங்கு கூடி யிருந்த கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அந்த வாகனத்தை வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே  விடாமல்  மறித்து  போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்கள் வாகனத்தில் உள்ள பெட்டிகளை  கீழே இறக்கும் படி கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனையடுத்து வண்டியில் இருந்த அனைத்து பெட்டிகளும் கீழே  இறக்கப்பட்டு அதனை திறந்து காட்டுமாறு அதிகாரிகளிடம்  கட்சிப் பிரமுகர்கள் வாக்குவாதத்தில்  ஈடு பட்டனர்.  இதையடுத்து அனைத்துப் பெட்டிகளும் திறந்து காட்டிய பிறகு வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே  கொண்டு செல்லப்பட்டது.  இத்தகைய  குளறுபடிகளுக்கு காரணம் அதிகாரி களின் அலட்சியம் என்றும், இந்த காலியாக உள்ள பெட்டிகளை முன் கூட்டியே கொண்டு சென்று இருந் தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது என  அனைத்து கட்சியினரும் தெரிவித் தனர்.  இதனால் இளம்பிள்ளை - காக்கா பாளையம் சாலையில்  சுமார் ஒரு மணி  நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

;