tamilnadu

கோவில் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக காவல் நிலையத்தில் புகார்

சென்னை:
சாதி ஆணவக்கொலைக்குத் துணைபோன  குளித்தலை காவல்நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் இடையவலசை கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரியும், அதே மாவட்டம் தோப்புக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவேக் என்கிற இளைஞரும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியினர்என்று சொல்லி சாவித்திரியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜூன் 7 அன்று  கோயம்புத்தூருக்கு சென்றுகொண்டிருந்த இவர்கள் இருவரையும் கரூர் மாவட்டம் குளித்தலை சோதனைச்சாவடியில் பிடித்துகாவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சாவித்திரியின் பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சாவித்திரியை ஒப்படைத்துள்ளனர்.ஏற்கனவே, பெற்றோர் தன்னை அடித்துக் காயப்படுத்திய கொடுங்காயங்களை காவல்துறை அதிகாரிகளிடம் காண்பித்து, அவர்களோடு அனுப்பினால் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று சாவித்திரி காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் பெற்றோருடன் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்துள்ளனர். இதனையடுத்து சாவித்திரியை ஜூன்  11  அன்று அவரது பெற்றோர்கொலைசெய்து உடலை எரித்துள்ளனர். 

இப்பிரச்சனையில் குளித்தலை காவல்நிலைய அதிகாரிகள் சாதி ஆணவக்கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். மேலும், சாதி ஆணவக்கொலை தொடர்பாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற  தீர்ப்புகளையும் அவமதிக்கும் விதமாக செயல்பட்டுள்ளனர். எனவே, குளித்தலை காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதுடன், அவர்களை கைது  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாலிபர் சங்கத்தின்தமிழ்நாடு மாநிலக்குழு  வலியுறுத்துகிறது.தமிழக அரசு சாதி ஆணவக்கொலைகள் நடைபெறாமல் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  இதில் தவறிழைக்கும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;