சேலம், பிப். 22- சேலத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 250 பயனாளிகளுக்கு விலை யில்லா கோழிக்குஞ்சுகள் சனியன்று வழங்கப்பட்டது. தமிழக அரசு, கால்நடை பராமரிப்பு துறை மூலம் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், கோழிகளை வழங்கி விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரு கிறது. இதன்ஒருபகுதியாக சேலம் அருகே கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் கால் நடை பராமரிப்புத்துறை சார்பில் நடை பெற்ற நிகழ்ச்சியில், கோழிகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 250 பயனாளிகளுக்கு விலை யில்லா கோழிக்குஞ்சுகளை வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி வழங்கினார். மேலும் பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில் சுமார் ரூ.85 லட்சம் மதிப்பிலான தார்ச் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பனமரத்துப் பட்டி ஒன்றிய குழுத்தலைவர், பஞ்சாயத்து தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.