tamilnadu

img

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆளுநருக்கு எதிராக மாணவர் இயக்கங்கள் போராட்டம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மோசடி வழக்கில் சிக்கி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் ரவி இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு எதிராக எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் இயக்கங்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த புகாரில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், மோசடி வழக்கில் சிக்கி ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் ரவி இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதற்கு எதிராக இந்திய மாணவர் சங்கம், திராவிடர் மாணவர் கழகம், திமுக மாணவர் அணி, மதிமுக மாணவர் அணி, அகில இந்திய மாணவர் பெருமன்றம், தமிழ்நாடு மாணவர் முன்னணி உள்ளிட்ட மாணவர் இயக்கங்கள் போராட்டம் நடத்தினர். 
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதன் காரணமாக பெரியார் பல்கலைக்கழகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
 

;