சேலம், ஜூன் 7- சேலம் – சென்னை 8 வழி நெடுஞ்சா லைக்கு ஆதரவாக பேசிய தமிழக அமைச்சர்களை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டு வழி சாலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் மக்கள் கொரோனா பாதிப்படடைந்துள்ள நிலையில், அது குறித்து நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு, எட்டு வழிசாலை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய் திருப்பதை கண்டித்தும், 8 வழி சாலை அமைக்க ஆதரவாக பேசிய தமிழக அமைச்சர்கள் கருப்பண்ணன் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோரை கண்டித்தும் சேலம் அருகே நாழிக்கல் பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத் தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி தனிமனித இடைவெளியை கடை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது கடும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த விவசாயிகள், எட்டு வழிச் சாலைக்கு ஒரு பொழுதும் தங்களது விவசாய நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் உறுதியாக கூறி யுள்ளனர்.