tamilnadu

திறன் போட்டி ஜன. 20-ல் துவக்கம் மாவட்ட உதவி இயக்குநர் வேண்டுகோள்

சேலம், ஜன.16- மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு விண்ணப்பித் துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வில் கலந்து கொள்ள  வேண்டும்.என மாவட்ட உதவி இயக்குநர் எஸ்.வி. ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட உதவி இயக்குநர் (திறன் பயிற்சி) கூறியிருப்பதாவது, உலகத்திறன் போட்டிகள் வரு கின்ற 2021 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில்  நடைபெறவுள்ளது.  இதன் முதல் கட்டமாக மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறவுள்ளது.  இதில் கலந்து  கொள்ள இம்மாவட்டத்தின் சார்பாக 2270 போட்டி யாளர்கள் 47 திறன் பிரிவுகளில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் மாவட்ட அளவிலான போட்டிகளில் தேர்வு செய்து, பின் மாநில மற்றும் அகில இந்திய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படுவோர் உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வர்.  மேலும், உலகப்போட்டிகளில் கலந்து கொள் வோருக்கு ரூ.25 லட்சம் வரை செலவு செய்து ஊக்கப்படுத்தி போட்டிகளில் பங்கேற்கும் போட்டி யாளர்கள் எந்தவிதக் கட்டணமும் செலுத்தத் தேவை யில்லை. இந்நிலையில், போட்டியாளர்களை தேர்ந் தெடுக்க, மாவட்ட அளவிலான தேர்வுகள், ஜன. 20, 21  மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது. அதன்  பின்னர் ஜன. 23 முதல் 31 வரை முதன்மை செய்முறைப் பயிற்சித் தேர்வுகள்  அதே தேர்வு மையங்களில்  காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடை பெறும். மாவட்ட அளவிலான திறன்போட்டிக்கு விண்ணப் பித்துள்ள மாணவர்கள் அனைவரும் இத்தேர்வில் கலந்து கோள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். 

;