tamilnadu

img

வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் மணல் நடவடிக்கை எடுக்க கட்டிட பொறியாளர்கள் கோரிக்கை

சேலம், ஜன. 12-  தமிழகத்திலிருந்து வெளி மாநிலங் களுக்கு மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட கட்டிட பொறி யாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சேலம் மேற்கு மாவட்ட கட்டிட பொறி யாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சனியன்று நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவர் செல்வகாந்தன்  கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் செயலாளர் சாமிநாதன், பொருளாளர் முரு கேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண் டனர். இதுகுறித்து செல்வகாந்தன் தெரிவித் துள்ளதாவது:- வீடு கட்டுவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க வீடு கட்டுவதற்கான அரசு அனுமதியை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப் படுத்த வேண்டும். அனைத்து கட்டிடங் களும் உரிய கட்டிட பொறியாளர்கள் மேற் பார்வையில் கட்டிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்க ளுக்கு மணல் கடத்தப்படுவதை தடுத்து  தட்டுப்பாடின்றி தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான மணல் கிடைக்க அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். முப்பது நாட்க ளுக்குள் வீடுகட்ட அனுமதி வழங்க வேண் டும். மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட இடங்களில் வீடுகட்ட அனுமதிக்காக அனைத்து சான்றிதழ்கள் வழங்கினாலும் தாமதம் செய்யப்படுவதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;