tamilnadu

சேலம் பெரியார் பல்கலை. எம்சிஏ படிப்புக்கு அங்கீகாரம் துணைவேந்தர் தகவல்

சேலம், மே 14-சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கணினி அறிவியல் துறையால் நடத்தப்பட்டு வரும் எம்சிஏ படிப்புக்கு அகில இந்தியப் பொறியியல் கல்விக் குழுவின் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பல்கலை. துணைவேந்தர்பேராசிரியர் பொ. குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பெரியார் பல்கலையில் கல்வி, ஆராய்ச்சிக்கு உகந்தகட்டமைப்புவசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் இந்த விடுமுறைக்குள் தனித்தனியாக அந்தந்த துறைமாணவர்களின்பயன்பாட்டுக்கென கணினிமையம் உருவாக்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வகத்துக்குத் தேவையான உபகரணங்கள், மென்பொருள்கள் கொள்முதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் தரமான பல்கலை.யில் பெரியார் பல்கலைக்கழகம் தேசியத்தர வரிசைப்பட்டியலில் 68 வது இடத்தை எட்டியுள்ளது.பல்கலை.யில் 250க்கும் மேற்பட்ட அண்மைத் தொழில்நுட்பம் கொண்ட கணிப்பொறிகளும், 7 வொர்க் ஸ்டேசன்களும், ஹைபெர்பார்மன்ஸ் கணிப்பொறிகளும் மாணவர்களின் பொது பயன்பாட்டுக்கென உள்ளன. பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் கணினி அறிவியல் துறை பல்கலைக்கழக மானியக் குழுவின் சிறப்பு ஒதுக்கீட்டின் இரண்டாவது நிலையை எட்டி ரூ.81.50 லட்சம் நிதி பெற்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்துறையின் எம்சிஏ படிப்புக்கு அகில இந்தியப் பொறியியல் கல்விக் குழுவின் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.பல்கலை. எம்சிஏ படிப்புக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ஏ.ஐ.சி.டி.இ- வைச் சேர்ந்த குழுகடந்த ஏப்.4 ஆம் தேதி பல்கலை.வந்து கட்டமைப்பைப் பார்வையிட்டனர். குழுவின் முன் துறைத்தலைவர் பேராசிரியர் கு.தங்கவேல் தலைமையிலான குழுவினர் துறையின் கட்டமைப்பு, உபகரணம், கல்வி, ஆராய்ச்சி செயற்பாடுகளை விளக்கினர்.இதைத்தொடர்ந்து, பெரியார்பல்கலைக்கழக எம்.சி.ஏ. படிப்புஏஐசிடிஇ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்ஏஐசிடிஇ உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து கட்டமைப்பு, ஆராய்ச்சிநிதி பெறும் வாய்ப்புஉருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவிலான முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகி உள்ளது. கணினி அறிவியல் துறையில் டேட்டா அனலிடிக்ஸ் என்ற இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டப்படிப்பும் நிகழ் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின் கல்வி,ஆராய்ச்சி, நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் படிப்படியாககணினிமயமாக்கப்பட்டு வருகின்றன இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

;