இளம்பிள்ளை, ஜன. 20- சேலம் மாவட்டம், மகுடஞ்சா வடி காவல் துறையினர் சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா இளம்பிள்ளை பகுதியில் திங்களன்று நடைபெற்றது. இப்பேரணியில் தலைகவசம் அணிவது அவசியம் குறித்தும், சாலை விதிமுறைகள் கடைப்பி டிப்பது குறித்தும் சாலை விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. இதில், காவல் உதவி ஆய்வா ளர் பெரியசாமி மற்றும் காவல் துறையினர், வாகனஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டு முக் கிய சாலைகளில் இருசக்கர வாக னங்களில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தருமபுரி
இதேபோல், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 31-வது சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி கொடியசையத்து துவக்கி வைத் தார். 31-வது சாலைப் பாதுகாப்பு வார விழா மற்றும் உயிர்பா துகாப்பு குறித்து 250 மகளிர்கள் இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசத்துடன் விழிப்புணர்வு பேர ணியில் பங்கேற்றனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய இப்பேரணி இலக்கியம்பட்டி, பார திபுரம், அரசு மருத்துவமனை, நெச வாளர் காலனி வழியாக 4 ரோடு பகுதியில் நிறைவடைந்தது. இதில், தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. இப்பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குநர் ஆர்த்தி, மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சுஜாதா, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில் வேலன், உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட் டம்) கணேசன், காமராஜ், திரு.ராஜீவ்காந்தி, சிவக்குமார், மோட் டர் வாகன ஆய்வாளர்கள் மணி மாறன், முனுசாமி, பன்னீர் செல்வம், ராஜாமணி, காவல் துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்ட னர்.